இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவுகூர்வோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இஸ்லாமியர்களால் ஏராளமான இந்துக்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14-ம் தேதியை பிரிவினை பயங்கரவாத நினைவு தினமாக அனுஷ்டிக்குமாறு, பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக பிரிவினை பயங்கரவாத நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
அந்த வகையில், இந்ததாண்டு, பிரிவினை பயங்கரவாத நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டு, பிரதமர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாட்டின் பிரிவினையின்போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களைப் பயபக்தியுடன் நினைவுகூர்வோம். இடப்பெயர்வின் சுமைகளை சுமக்க தள்ளப்பட்டவர்களின் துன்பங்களையும், போராட்டங்களையும் இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது. அப்படிப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
विभाजन विभीषिका स्मृति दिवस उन भारतवासियों को श्रद्धापूर्वक स्मरण करने का अवसर है, जिनका जीवन देश के बंटवारे की बलि चढ़ गया। इसके साथ ही यह दिन उन लोगों के कष्ट और संघर्ष की भी याद दिलाता है, जिन्हें विस्थापन का दंश झेलने को मजबूर होना पड़ा। ऐसे सभी लोगों को मेरा शत-शत नमन।
— Narendra Modi (@narendramodi) August 14, 2023
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று பிரிவினை பயங்கரவாத நினைவு தினம் அனுசரிக்க, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநில மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், பிரிவினையின்போது நிகழ்ந்த கொடூர சம்பவங்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் 75 இடங்களில் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.