அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுராவை வெளியேற்றிய இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 16வது சுற்றுக்கு முன்னேறினார்.
அஜா்பைஜான் நாட்டில் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) சதுரங்கத்துக்கான உலக கோப்பை நடந்து வருகிறது. இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல சதுரங்க வீரர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை நடந்த போட்டியில் அமெரிக்க சதுரங்க வீரரான கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுராவை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
இதன் மூலம் அவர் FIDE உலகக் கோப்பை சதுரங்கப் போட்டியின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றான கடைசி 16க்கு அவர் முன்னேறினார்.
And Praggnanandhaa does it! Eliminating one of the pre tournament favourites Hikaru Nakamura to go through to the next round.@FIDE_chess #FIDEWorldCup
— Viswanathan Anand (@vishy64theking) August 11, 2023
இது குறித்து சதுரங்க விளையாட்டு வீரர் விஷவ்வநாத ஆனந்த் X பக்கத்தில் (twitter) கூறியதாவது,
“பிரக்ஞானந்தா நன்றாக ஆடுகிறார் விளையாடுகிறார்.” போட்டிக்கு முன் ஆதிக்கம் நிறைந்த ஒருவராக இருந்த ஹிகாரு நகமுராவை வெளியேற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.