கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி திருமலை கோவிலுக்கு செல்லும் பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வனத்துறையினர் அப்பகுதியில் உலா வந்த மற்றொரு சிரத்தையையும் இன்று (ஆகஸ்ட் -17) பொறிவைத்து பிடித்துள்ளதாக அறிவித்தனர்.
கடந்த 50 நாட்களில் திருப்பதி திருமலையில் பிடிபட்ட சிறுத்தைகளில் இது மூன்றாவது சிறுத்தை எனவும் இரண்டாவதாக பிடிபட்ட சிறுத்தையே கடந்த வாரம் 6-வயது சிறுமி லக்க்ஷிதாவை தாக்கியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வன அதிகாரி சதீஷ் ரெட்டி கூறுகையில், “ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயிலுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் இரண்டு சிறுத்தைகள் நடமாடுவதை நாங்கள் கண்டுபிடித்தோம்”.
சிறுமியைத் தாக்கிய சிறுத்தையின் வயிற்றுப் பகுதியில் ஏதேனும் மனித ஊன் உள்ளதா? என கண்டறிய ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அந்தச் சிறுத்தையை உயிரியல் பூங்காவில் விடுவதா அல்லது வனப்பகுதிக்குள் விடுவதா என்பது குறித்து வனத்துறையால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் வனவிலங்களைக் கண்காணிக்க காமிராக்கள் பெருத்தப்பட்டு வருகின்றன.