பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மேம்பட ஆஸ்திரேலியா விளையாட்டுத் துறை அமைச்சகத்துடன் ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியாவும் இரு நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுத் துறையில் பரிமாற்றத் திட்டங்கள், விளையாட்டு அறிவியல், தடகளம், பயிற்சியாளர்களுக்கான பயிற்சி மேம்பாடு, விளையாட்டு நிர்வாக மேம்பாடு, விளையாட்டில் அடிமட்ட அளவில் பங்கேற்பு ஆகியவற்றை மேம்படுத்த அறிவு மற்றும் நிபுணத்துவத்தை விரிவுபடுத்த இந்த ஒப்பந்தம் உதவும்.
அதனால் ஆஸ்திரேலியா விளையாட்டு வீரர்களுக்கான தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியாவிடமிருந்து அங்கீகாரம் மூலம் வழங்கப்படும். அதே பொருட்களை அவர்கள் உலக அளவில் வர்த்தகம் செய்வதற்கும் ஆஸ்திரேலியா அரசுக்கு அதிக வசதிகளை வழங்க இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பால் இந்தியாவிற்கு ஏற்படும் நன்மைகள் ஜாதி, மதம், மாநிலம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பு விளையாட்டு வீரர்களுக்கும் சமமாக விளையாட்டில் நிபுணத்துவம் கூடிய நுண்ணறிவு கிடைக்க இது வழிவகை செய்கிறது.
இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவு மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது