உண்மைகளை வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைக்க முற்படுவதும், பின்னர் அம்பலப்பட்டு அசிங்கப்படுவதும் திமுகவின் வாடிக்கை என்பதை மீண்டும் ஒரு முறை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார் நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குளிர்ககால கூட்டத் தொடர் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘’1989ம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆடையை கிழித்து திமுகவினர் மானபங்கம் செய்ததாக சுட்டிக்காட்டி பேசினார். இது சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பதிவு செய்துள்ளார். இதனை தனது எக்ஸ் பதிவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
உண்மைகளை வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைக்க முற்படுவதும், பின்னர் அம்பலப்பட்டு அசிங்கப்படுவதும் திமுகவின் வாடிக்கை என்பதை மீண்டும் ஒரு முறை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார் நமது மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள். https://t.co/CKFOB0xi9s
— K.Annamalai (@annamalai_k) August 17, 2023