இரயில்வே பாலம் இடிந்து 17 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்!
Jul 6, 2025, 07:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரயில்வே பாலம் இடிந்து 17 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்!

Web Desk by Web Desk
Aug 23, 2023, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிசோரம் மாநிலத்தில் இரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தகவலறிந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்காவில் இருந்தபடியே தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

மிசோரம் மாநிலத்தின் தலைநகரான ஐஸ்ஸால் பகுதியில் சுமார் 21 கி.மீ. தொலைவிலுள்ள சாய்ரங் பகுதியில் இரயில்வே பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இப்பணியில் சுமார் 40 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், இன்று காலை சுமார் 10 மணியளவில் தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அப்பாலம் இடிந்து விழுந்தது.

அப்போது, கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் அதலபாதாளத்தில் விழுந்தனர். தகவலறிந்த மாநில பேரிடர் மீட்புப் படையினரும், காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல, உள்ளூர் மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இவ்விபத்து குறித்து தகவலறிந்த மிசோரம் முதல்வர் சோரம்தங்கா தனது எக்ஸ் பக்கத்தில், “ஐஸால் அருகே சாய்ராங்கில் கட்டுமானப் பணியின்போது, ரயில்வே பாலம் இடிந்து விழுந்தது. இச்சம்பத்தில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இச்சம்பத்தால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மீட்புப் பணிக்கு உதவிய மக்களுக்கு நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.

Pained by the bridge mishap in Mizoram. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon. Rescue operations are underway and all possible assistance is being given to those affected.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the…

— PMO India (@PMOIndia) August 23, 2023

இதனிடையே, பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்காக தென்னாப்பிரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு இத்தகவல் தெரியவந்தது. இதையடுத்து, தனது எக்ஸ் பக்கத்தில், “மிசோரமில் இரயில்வே பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத்  தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Under construction railway over bridge at Sairang, near Aizawl collapsed today; atleast 17 workers died: Rescue under progress.

Deeply saddened and affected by this tragedy. I extend my deepest condolences to all the bereaved families and wishing a speedy recovery to the… pic.twitter.com/IbmjtHSPT7

— Zoramthanga (@ZoramthangaCM) August 23, 2023

அதேபோல, இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில், “மிசோரமில் நடந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தால் வருத்தமடைந்தேன். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி நடக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: accidentPM Modi
ShareTweetSendShare
Previous Post

“இன்று வரலாறு படைக்கப்படும்”: மத்திய அமைச்சர் உறுதி!

Next Post

கார்ல்சனுக்கு புட் பாய்சன்: செஸ் இறுதிப்போட்டியில் வெற்றிப் பெறுபவர் யார்?

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies