அசர்பைஜானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவுக்கும் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கும் இடையே 35 நகர்வுகளுக்குப் பிறகு போட்டி டிராவில் முடிந்தது.
பிரக்ஞானந்தா வெள்ளைக் காய்களுடன் விளையாடி, போட்டியின் தொடக்கத்தில் சரியான நேரத்தில் முன்னேறினார், ஆனால் அவர் இறுதி நேரத் சாதகத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் சிக்கலுக்கு ஆளானார்.
இன்று இறுதிப் போட்டியின் 2வது ஆட்டத்திற்கு இரு வீரர்களும் திரும்புகின்றார்கள். இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதி போட்டியில் உலகின் சிறந்த செஸ் வீரர் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்த ஃபேபியானோ கருவானாவை திணறடித்தார். இந்த நிலையில் நிஜாத் அபாசோவ்வுடன் முடிவடைந்த அரையிறுதி போட்டிக்கு பிறகு தனக்கு புட் பாய்சன் ஏற்பட்டது என்றும் அதனால் பெறும் அவதிப்பட்டேன் என்றும் கார்ல்சன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று நடைப்பெறவிருக்கும் இறுதிப் போட்டியின் இரண்டாம் நிலையில் யார் வெற்றிப் பெறுவார்கள்? என்ற எதிர்ப்பார்ப்பு இரசிகர்களிடம் எழுந்துள்ளது.