பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆன்டனியை நியமித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆண்டனியை பாஜக தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா நியமித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.