ஜனநாயகம் நன்றாக இருக்க வேண்டும், மக்கள் சார்ந்த் அரசியல் நடக்க வேண்டும் என்றால் யாரெல்லாம் அரசு பணத்தில் ஊழல் செய்தார்களோ அவர்களுக்கு தண்டனை விரைவாக கொடுக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை,
பொன்முடி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். தமிழகத்தின் அரசியல், பணம் சார்ந்து நடக்கிறது. தமிழக அரசியல் அதலபாதாளத்தில் உள்ளது. ஊழல் வழக்கு என்பதால் உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனது அமைச்சர் பதவியை பொன்முடி இழக்கிறார். இதைபோல், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மீது சென்னை உயர்நீதிமன்றம் மறு பரிசீலனை செய்தது.
ஜனநாயகம் நன்றாக இருக்க வேண்டும். மக்கள் சார்ந்த் அரசியல் நடக்க வேண்டும் என்றால் யாரெல்லாம் அரசு பணத்தில் ஊழல் செய்தார்களோ அவர்களுக்கு தண்டனை விரைவாக கொடுக்க வேண்டும். என்னுடைய அரசியல் என்பது ஊழலை எதிர்த்து பண்ண கூடியது ஆகும். ஊழல் செய்த அனைவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.