பா.ஜ.க. அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது: அமித்ஷா!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க. அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது: அமித்ஷா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 21, 2023, 12:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் பலமுறை ஆட்சிக்கு வந்திருந்தாலும், அக்கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, தான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

இந்திய குற்றவியல் சட்டங்களான, இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முறையே 1860, 1898 மற்றும் 1872-ம் ஆண்டுகளில் இயற்றப்பட்டன.

ஆகவே, இந்த 3 சட்டங்களையும் இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்டமாக அச்சட்டங்களுக்கு, ‘பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய சன்ஹிதா’ என ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதன் பிறகு, மேற்கண்ட 3 புதிய குற்றவியல் திருத்த சட்ட மசோதாக்களும் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இச்சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளும்படி எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, மேற்கண்ட மசோதாக்கள் நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அப்போது, நிலைக்குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. இதைத் தொடர்ந்து, பழைய மசோதாக்கள் வாபஸ் பெறப்பட்டு, திருத்தம் செய்யப்பட்ட மசோதாக்கள் கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மசோதாக்கள் மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், விவாதத்துக்கு பிறகு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “3 மசோதாக்களும் விரிவான ஆலோசனைகளுக்குப் பின், திருத்தம் செய்யப்பட்டு வரைவு செய்யப்பட்டன.

மேலும், அவை ஒப்புதலுக்காக சபையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, வரைவு சட்டங்களின் ஒவ்வொரு காற்புள்ளி மற்றும் முழு நிறுத்தத்தையும் கவனமாக படித்துப் பார்த்துள்ளேன். தற்போது நடைமுறையில் உள்ள 3 குற்றவியல் சட்டங்களும் ஆங்கிலேயர் ஆட்சியின் மனநிலையை பிரதிபலிப்பவை.

அவற்றில், தண்டிப்பது மட்டுமே நோக்கமாக உள்ளதே தவிர, நீதியை நிலைநாட்டுவது நோக்கமாக இல்லை. பிரிட்டிஷ் அரசு இயற்றிய இந்த சட்டங்களைத்தான், நாம் இதுவரை பின்பற்றி வருகிறோம். நாம் சுதந்திர பெற்று 75 ஆண்டுகளாகியும் இன்னும், ‘ஹெர் மெஜஸ்டி, பிரிட்டிஷ் ராஜ்ஜியம், தி கிரவுன், பாரிஸ்டர்’ போன்ற வார்த்தைகள் நம் சட்டங்களில் பயன்பாட்டில் உள்ளன.

கும்பலால் தாக்கப்பட்டு நிகழும் படுகொலைகளுக்கு மரண தண்டனை விதிக்க புதிய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய மனநிலை இருந்தால் மட்டுமே நம் சட்டங்களை புரிந்து கொள்ள முடியும். இத்தாலிய மனநிலையால் புரிந்து கொள்ள இயலாது.

பொதுவாகவே நீதி கிடைப்பது தாமதமாகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. நீதிமன்ற விசாரணை இழுத்துக் கொண்டே செல்வதாக கூறப்படுகிறது. போலீஸை கேட்டால் நீதிமன்றத்தையும், அரசையும் கைகாட்டுகின்றனர். நீதிமன்றம் போலீசை கைகாட்டுகிறது. அரசு போலீஸையும் நீதிமன்றத்தையும் கைகாட்டுகிறது.

இப்படி ஒருவர் மேல் ஒருவர் பழி சுமத்துவது தொடர்கிறது. இதனால், ஏழை எளிய மக்கள் வழக்குகளை நடத்தி முடிக்க அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் எல்லாம் புதிய சட்டங்களில் சரி செய்யப்பட்டுஉள்ளன.

இனி, ஒரு வழக்கு குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். முதற்கட்ட விசாரணையை 14 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இதன் பிறகு 24 மணி நேரத்துக்குள் விசாரணை அறிக்கை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விசாரணை நிலுவையில் இருந்தாலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, 180 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்ள முடியாது. இதற்கான சிறப்பு அனுமதியை நீதிமன்றத்தில் பெற வேண்டும். தீர்ப்புகளை 45 நாட்களுக்கு மேல் நீதிமன்றம் ஒத்திவைக்க முடியாது.

7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்படும் குற்ற வழக்குகளில், தடய அறிவியல் துறையினரின் பங்களிப்பு அவசியமாக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலைக்காக மனு தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அந்த 7 நாட்களில் நீதிபதி விசாரணையை நடத்த வேண்டும். அதிகபட்சமாக 120 நாட்களில் வழக்கு விசாரணைக்கு வரும்.

இனி குற்றம் நடந்த 30 நாட்களுக்குள் குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொண்டால் தண்டனை குறைவாக இருக்கும். வழக்கு விசாரணையின் போது ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாது. அனைத்து ஆவணங்களையும் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். இதில் காலதாமதம் செய்யப்படாது.

மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் போன்ற வழக்குகளில், குற்றவாளிகள் பாகிஸ்தான் சென்று தஞ்சமடைவதால், அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்க்கின்றனர். இதனால், வழக்கு நிலுவையில் கிடக்கின்றன. இனி 90 நாட்களுக்கு மேல் குற்றவாளி நேரில் ஆஜராகவில்லை எனில், அவர் இல்லாமலேயே வழக்கு விசாரணை நடத்தி முடிக்கப்படும்.

அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவோம் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. அதன்படி, தற்போது இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல, மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றுவோம் என்று கூறினோம். அதனையும் நிறைவேற்றி இருக்கிறோம். இதனால் பெண்களுக்கு சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் கூடுதல் அதிகாரம் கிடைக்க உள்ளது.

இதற்கு முன்பு எத்தனையோ முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதும், அதனைச் செய்யவில்லை. மோடி அரசுதான் அதன் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது” என்றார். இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதியா நாகரிக் சுரக்ஷ சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

Tags: ParliamentAmit shacriminal lawsPassed
Share
Tweet
SendShare
Previous Post

கேரளாவில் மேலும் 300 பேருக்கு கொரோனா!

Next Post

பொன்முடி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்! – அண்ணாமலை

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies