தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தொடங்கி வைக்கிறார்.
டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான ஒருங்கிணைக்கும் குடை அமைப்பான தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தை டங்கி வைக்கிறார். இது ’ஆத்ம நிர்பார்’ பாரதத்தை உருவாக்கும் ‘சஹகர் சே சம்ரித்தி’ என்ற இலக்கை அடைவதில் மற்றொரு மைல்கல் என கூறப்படுகிறது.
இந்த முயற்சியானது நகர்ப்புற கூட்டுறவு வங்கித் துறையை நவீனமயமாக்குவதையும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது வங்கிகள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் என கருதப்படுகிறது.
தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NUCFDC)இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கி சாரா நிதி நிறுவனமாக செயல்படுவதற்கும், நகர்ப்புற கூட்டுறவு வங்கித் துறைக்கான குடை அமைப்பாகச் செயல்படுவதற்கும் பதிவுச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
NUCFDC கூட்டுறவு வங்கிகளுக்கு சிறப்பு செயல்பாடுகள் மற்றும் சேவைகளை உறுதி செய்யும், வங்கிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு இடையே தகவல் தொடர்பு வசதி மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.