யுகாதி பண்டிகையை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யுகாதி பண்டிகை தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தின் தொடக்க விழாவாகவும் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் இன்று யுகாதி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
யுகாதி பண்டிகையை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “யுகாதி திருநாளில் கர்நாடகாவில் இருக்கும் எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”.
“தெலுங்கு சகோதர, சகோதரிகளுக்கு யுகாதி வாழ்த்துக்கள். இவ்விழா அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியையும் செழுமையையும் தருவது மட்டுமின்றி, ஒருவருக்கொருவர் பிணைப்பை வலுப்படுத்துகிறது. கடவுள் அனைவரையும் ஆசிர்வதிக்க பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.