ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தின் போது லோகோ பைலட்டு மற்றும் துணை லோகோ பைலட்ஆகிய இருவரம் கிரிக்கெட் பார்த்ததற்கான எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பலாசா பேசஞ்சர் ரயில் மீது ராயகட்ட பேசஞ்சர் ரயில் மோதியது.
இந்த விபத்தில் பலாசா பேசஞ்சர் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு 17 பேர் உயிரிழந்தனர். 34 பேர் காயம் அடைந்தனர்.
விபத்தின் போது லோகோ பைலட் மற்றும் துணை லோகோ பைலட்டு டுகள் கிரிக்கெட் போட்டி பார்த்ததாக செய்திகள் வெளியானது.
இதனையடுத்து லோகோ பைலட்டுகள் ப்ளூடூத் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் தடை விதித்தது.
இந்நிலையில் ரயில் விபத்தின் போது லோகோ பைலட்டுகள் கிரிக்கெட் பார்த்ததற்கான ஆதாரம் இல்லை என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
விபத்தில் இறந்த லோகோ பைலட் ராவ் மற்றும் அசிஸ்டென்ட் லோகோ பைலட் சிரஞ்சீவி ஆகியோர் பயன்படுத்திய செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அழைப்பு விவரங்கள் மற்றும் டேட்டா பயன்பாடு குறித்து சோதனை நடத்தப்பட்டதில் அவர்கள் கிரிக்கெட் பார்த்தற்கான எந்த அறிகுறியும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.