தேனியில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் தேனி அருகேயுள்ள கம்மவார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
இக்கல்லூரியின் முன்னாள் ஊழியரான ராஜேஷ் கண்ணன், அத்துமீறி கல்லூரிக்குள் செல்ல முயன்ற நிலையில் அங்கிருந்த காவல்துறையினர், அவரை துரத்திப் பிடித்து பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.