தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்றும், நாளையும் அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் பஞ்சாப் , ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், இன்றிலிருந்து வரும் 24-ம் தேதி வரை மிகக் கடுமையான வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.