ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
பாபட்லா மாவட்டத்தில் உள்ள பட்டிப்ரோலு பகுதியில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இந்த சிலைக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.