புதுச்சேரியில் காலாவதியான உணவுப் பொருட்களை சாலையோரத்தில் வீசிய கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெட்டப்பாக்கம், கொம்யூன் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் காலாவதியான லேய்ஸ், பிங்கோ, குர்குரே மற்றும் சமையலுக்குத் தேவையான மசாலா பாக்கெட்டுகள் குவியலாக கொட்டப்பட்டுள்ளன. அதனை அப்பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் சிலர் சேகரித்து வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
காலாவதியான பொருட்களை பயன்படுத்தும்போது, அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையில் காலாவதியான உணவுப் பொருட்களை சாலையோரத்தில் வீசிய கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.