அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் வயது முதிர்ந்த வேட்பாளர் என்ற சாதனையை 78 வயதான டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இதேபோன்று ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் முடிவுடன் பைடன் களம் இறங்கினார்.
ஆனால், வயது முதிர்வு, விவாதத்தின்போது திணறல் உள்ளிட்ட சர்ச்சைகளால் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் அதிகரித்தது. இதனையடுத்து அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால், அதிக வயது கொண்ட அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் பார்க்கப்படுகிறார்.