15 ஆண்டுக் காலமாக ஆட்சியில் இருந்த நாட்டில் தமக்கு பாதுகாப்பில்லை என்று உணர்ந்ததும் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, சகோதரி ஷேக் ரிஹயனாவுடன் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் இந்தியாவிலேயே தங்க போகிறாரா ? அல்லது லண்டனுக்கு செல்கிறாரா ? எங்கே குடியேறுகிறார் ஷேக் ஹசீனா? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
ஒரு மாத காலத்துக்கும் மேலாக நடந்த தொடர் வன்முறை போராட்டங்களின் விளைவாக, வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை நிர்ப்பந்ததால் ராஜினாமா செய்தார். பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் அடைந்திருக்கிறார்.
டெல்லிக்கு அருகில் ஹிண்டனில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தரையிறங்கிய ஷேக் ஹசீனாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசிய நிலையில், தற்போது டெல்லியில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தற்காலிகமாக ஷேக் ஹசீனா தங்கி இருப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், (next) இந்தியாவில் நீண்ட காலம் தங்கமாட்டார் என்றும் அவர் லண்டனுக்குச் செல்ல இருக்கிறார் என்றும் வங்க தேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஷேக் ஹசீனாவுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வரும் அவரது சகோதரி ஷேக் ரெஹானா பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவராவார்.
ஷேக் ரெஹானாவின் மகள் துலிப் சித்திக் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மேலும் அவர் , (next) தற்போதைய பிரதமர் கெயர் ஸ்டார்மரின் அரசில் இணை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். ஜூலை மாதம் நகர அமைச்சராக நியமிக்கப்பட்ட துலிப் சித்திக், நிதிச் சேவைத் துறையை மேற்பார்வையிடுகிறார், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் நம்பிக்கையை துலிப் சித்திக் பெற்றிருக்கிறார் என்பதையே குறிக்கிறது.
இந்த குடும்ப தொடர்புகளே ஷேக் ஹசீனாவுக்கு இங்கிலாந்தில் பாதுகாப்பான மற்றும் அரசியல் ரீதியாக சாதகமான சூழலை வழங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இது மட்டுமல்லாமல், பிரிட்டனின் சட்டம், அரசியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் தனிநபர்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
தற்போது அரசியல் கொந்தளிப்பால் வங்க தேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டில் பாதுகாப்பு இல்லை. (next) எனவே பிரிட்டன் புகலிடக் கொள்கைப்படி ஹசீனாவிற்கு லண்டனே நம்பிக்கைக்குரிய புகலிடமாக உள்ளது.
ஹசீனாவுக்கு இந்தியா நிரந்தர அடைக்கலம் தரும் நிலையில் அது , இந்திய- வங்க தேச உறவுகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் . வங்க தேசத்தின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழும். (next) எனவே தான், இந்தியா தற்காலிக புகலிடத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.
தனது மகன் சஜீப் வாசேத் ஜாய் அமெரிக்காவில் வசித்தாலும், ஷேக் ஹசீனா அமெரிக்காவுக்குச் செல்வதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் தனது அரசாங்கத்தை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியிருந்ததும், (next) ஷேக் ஹசீனா ஆட்சியில் மனித உரிமைகள் மீறப் பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், தேச பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதால்,வங்க தேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்கு இந்திய அரசு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.