மத்திய அரசு தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறான கருத்துக்களை கூறி வருவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய ஆரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 10 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கொடுத்துள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலினும், எடப்பாடியும் மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என பொய் கூறி வருவதாக தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபரின் என்கவுண்ட்டர் திட்டமிட்ட கொலை எனறும் அவர் சாடினார்.
முக்கிய குற்றங்களில் அதன் ஆதாரங்களை அழிக்கும் விதமாக காவல்துறை செயல்பட்டு வருவதாகவும் அவர் சாடினார். இந்து மதத்தை பற்றி பேசாமல் இருப்பதுதான் திமுகவுக்கு நல்லது என்றும் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.