வெளிநாடு முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால் உண்மை நிலை தெரியவரும் என முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது : தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் 9.99 லட்சம் கோடி மதிப்பில் 889 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதால் 19 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தேன். ஆனால் முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை என ஓடி ஒளிவது ஏன்? வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் ஆயிரம் முறை கோரியுள்ளார்.
அப்போது எந்த மரபுகளின் அடிப்படையில் கோரினார். கடந்த 3 ஆண்டுகளில் ₹10 லட்சம் கோடிக்கு முதலீடுகள் தொடங்க ஒப்பந்தம் போட்டாலும் ₹ 17,616 கோடி மட்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வராத முதலீடுகளை வந்ததாக கூறி மக்களை ஏமாற்றக்கூடாது. எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.