ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார்.
டி20 உலகக் கோப்பையுடன் அவரது தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்ததால், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.