கள்ளக்குறிச்சி அருகே சாலையில் குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, தனது காரை சாலையோர தடுப்புக்கட்டையின் மீது மோதவிட்டதால் நடிகர் ஜீவா காயமடைந்தார்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு தனது மனைவி மற்றும் உறவினர்கள் இருவருடன் நடிகர் ஜீவா காரில் வந்து கொண்டிருந்தார். கணியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையின் குறுக்கே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, நடிகர் ஜீவா தனது காரை, சாலையின் தடுப்பு கட்டையின் மீது மோதி நிறுத்தியுள்ளார்.
இதனால் நடிகர் ஜீவாவிற்கு காலில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வேறு காரில் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் சென்னை நோக்கி நடிகர் ஜீவா புறப்பட்டார். இதையடுத்து விபத்தில் சிக்கிய அவரது காரை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.