அமெரிக்க நாட்டின் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.
தமிழகத்தில் அதிகளவிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும் அமெரிக்கா நாட்டிற்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அந்நாட்டின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்து வருகிறார்.
கடந்த பத்து நாட்களில் 16 முன்னணி நிறுவனங்களுடன் 7 ஆயிரத்து 10 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தான நிலையில், நேற்றைய தினம் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன் மூலம் திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டஙக்ளில் அந்நிறுவனத்தின் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.