“திருமணிமுத்தாறு நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், நதியை தூய்மைப்படுத்தவும் திருமணிமுத்தாறு திருவிழா என்ற தலைப்பில் 12 நாட்கள் விழா நடைபெற உள்ளது” என அகில பாரதீய சந்தியாசிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அகில பாரதீய சந்தியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் ராமனந்த மகராஜ் மற்றும் பொதுச்செயலாளர் ஆத்மானந்த சரஸ்வதி ஆகியோர் பேட்டியளித்தனர்.
அப்போது, “12 நாள் விழாவில் ஆதினங்கள், மடாதிபதிகள், சந்நியாசிகள், துறவியர்கள், ஆன்மீக பெருமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்” எனவும், “கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறம் நாள்தோறும் மாலை நேரத்தில் ஆரத்தியும், கலை நிகழ்ச்சிகளுக்கும் நடைபெறும்” என தெரிவித்தனர்.