திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து, லால்குடி வழியாக நெய்குப்பை கிராமத்திற்கு, மகளிர் கட்டணமில்லா அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பயணிகளுடன் நெய்குப்பை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மேற்கூறை சரிந்து விழுந்தது. மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததே இது போன்ற விபத்துக்கு காரணமென பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.