நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியில், தற்காலிக ஆசிரியர் ஒருவரும், மற்றொரு ஆசிரியரும் சேர்ந்து, மாணவர்கள் சிலரை மிரட்டி பாலின சேர்க்கையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், புகாருக்கு உள்ளான தற்காலிக ஆசிரியர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளதாகவும், மற்றொரு ஆசிரியர் விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக, மாநகர காவல் ஆணையர் ரூபேஸ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.