தமிழ் திரையுலகில் பன்முகத் திறமை கொண்ட நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுவிற்கு தனி இடம் உண்டு. மீம்ஸ் கலைஞர்களின் ஆதர்சன நாயகனாக இருக்கும் வடிவேலு, திரையில் தோன்றினாலே சிரிப்பை வரவழைக்கும் நடிகராகவும் இருக்கிறார். அவரது மறக்க முடியாத நகைச்சுவை காட்சிகளின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
அன்றாட மனிசன் வாழ்க்கையில சோசியல் மீடியான்றதுரொம்ப முக்கியமான ஒன்னா ஆகிருச்சு. அப்படி என்ன அந்த சோசியல் மீடியாவுல இருக்குன்னு கேட்டா என்டர்டெயின்மென்ட் அந்த என்டர்டெயின்மென்ட் எது மூழமா வருதுன்ன அது மீம்ஸ் அந்த மீம்ஸ்க்கு பின்னாடி ஒரு முகம் இருக்கு அந்த முகம் தான் வடிவேலு.
ஆரம்பத்துல சின்ன சின்ன கதாபாத்திரத்துல ஒரு ஓரமா நடிச்சாலும் அவர் நடிக்கிறது தனித்துவமா தெரியும். போக போக வடிவேலுக்குன்னு தனி சீன்ஸ் வர ஆரம்பிச்சுச்சு. இன்னும் சொல்லனுன்னா படத்துக்கும் காமெடிக்கும் சமந்தமே இல்லாம இருந்தாலும் வடிவேலுவ வைகைப்புயலா ஏத்துக்கிட்ட மக்களுக்காக காட்சிகள் வைக்க ஆரம்பிச்சாங்க.
1993க்கு மேல டாப் நடிகர்களோட கால்சீட்டு கூட ஈசியா கிடைக்க ஆரம்பிச்சுச்சு ஆனா வடிவேலு ஓட கால்சீட்டு கிடைக்கிறதே கஷ்டமா ஆகிருச்சு. அந்த அளவுக்கு 1 வருஷத்துக்கு 10 படங்களுக்கு மேல நடிக்க ஆரம்பிச்சாரு.
சரி இப்ப கதைக்கு வருவோம் வடிவேலு மதுரைல பிறந்தாரு அங்க இருந்து சென்னை வந்தாருன்னு பழைய கதைய சொல்லி போர் அடிக்க விரும்பல. கொஞ்சம் பழைய சீடிய புதுப்பிச்சு சொல்ற மாதிரி ஆரம்பிப்போமா. ஹ்ம் பேஸ் ரியாக்ஷன், வடிவேலு பாட்டு, நடனம், டையலாக்குன்னு வடிவேலுவோட பெஸ்ட் மட்டும் பாப்போம்.
பேஸ் ரியாக்ஷன் பொருத்தவர இப்ப என்னங்க ஸ்மைலி ஸ்மைலின்னு சொல்லிக்கிட்டு இருக்கோம் வடிவேலு அப்பவே எல்லா ரியாக்ஷனும் கொடுத்துட்டாரு.
ஆஹா அடுத்து பாட்டு வடிவேலு பாடுறதுக்குன்னே பல பேன்ஸ் இருக்காங்க கனவிது தான் நிஜம் இதுதான் ஏற்கனவே தெரியாத பாடல ட்ரெண்ட் பன்னி விட்ட வடிவேலு இப்ப வடிவேலு பாடின பாட்ட சமூக வலைதளத்துல ட்ரெண்ட் பன்னிக்கிட்டு இருக்காங்க.
முறைப்படி கத்துக்கிட்டு ஆடுற டான்ஸ்ச விட இருக்குற மோடுக்கு ஏத்த மாதிரி ஆடுறதுல வடிவேலு கில்லாடி. இதலாம் பாக்கும் போது எப்படி தோனுதுன்னா இயக்குநர்கள் வடிவேலுக்காக கண்டென்ட் கொடுப்பாங்கலா இல்ல வடிவேலு அதுக்கு ஏத்த மாதிரி டையலாக்க மாத்திப்பாரான்னு தெரியல.
வடிவேலு டான்ஸ்
டையலாக்க பொருத்தவர சொல்லவா வேன்னு. ஒரு நாள் வடிவேலு டயலாக் பேசாம இருந்துப்பாப்போமன்னு நமக்கே ஒரு சேலஞ்ச் வெச்சா நம்மளே தோத்து பொய்டுவோம். அப்படி சந்தோசம், சோகம், உற்சாம்ன்னு எல்லாத்துக்கும் வடிவேலு பேசின டையலாக் கொட்டி கடக்கு.
வடிவேலு டயலாக்
இதெல்லாம் இருக்கட்டும் காமெடியன்னா பாத்திக்கிட்டு இருந்த வடிவேலு “இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி” ன்ற படம் மூலமா ஹூரோவா புதுப் பரிமாணம் எடுக்கிறாரு. அது பல காமெடியன்ஸ் ஹூரோவாக காலடி எடுத்து வைக்கிறதுக்கு முன் உதாரணம்முன்னு சொல்லலாம். இருந்தாலும் இந்த படத்துல வாழ்க்கைக்கு தேவையான எல்லா டையலாக்கும் இருக்கு.
இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி
எவ்வளவோ படங்கள் நடிச்சாலும் இதுவர காமெடி ரோல்லையும் பாத்திருப்போம் சீரியஸான அட்வைஸ் பன்ற மாதிரியான காட்சிகள்லையும் வடிவேலுவ பாத்திருப்போம். ஆனா ஒரு பிற்படுத்தப்பட்ட அப்பாவுடைய வலியும், வேதனையும் ரொம்ப இயல்பான நடிப்புல வெளி காட்டின வடிவேலுவ மாமமன்னன் படத்த பாத்திட்டு பாராட்டாத ஆளே இல்ல.
மாமன்னன்
நம்ம என்ன வேல பாக்குறோம்ன்றத தாண்டி அந்த வேலைக்காக என்ன பன்றோம்றதுதான் விஷயமே. அப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் மெனக்கிட்டு அந்த கதாபாத்திரத்துக்கு ஏத்த மாதிரி நடிச்ச நாள தான் இன்னமும் எல்லாருடைய மனசுலையும் காமெடி கிங்கா வாழ்ந்துகிட்டு இருக்காறு வடிவேலு.