பஹ்ரைச் பகுதியில் ஓநாய் தாக்கியதில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பஹ்ரைச் கிராமத்தில் சுற்றித்திரியும் ஓநாய்கள் தாக்கியதில் இதுவரை 8 பேர் உயிரிழந்த நிலையில், 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
வனப்பகுதியில் வெளியேறி ஊருக்குள் நடமாடிய 6 ஓநாய்களில் 5 பிடிப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு ஒநாயை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 50 வயதுடைய பெண்ணை ஓநாய் தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த பெண் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஓநாயின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது ஓநாய் கடித்து குதறியதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஓநாய் தாக்கியதில் பெண்ணின் கழுத்து பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும், ஓநாய் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.