நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கில் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் தந்தை வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷ் தமது பதவியை ராஜினாமா செய்தார்.
பெண் மருத்துவரின் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், மருத்துவமனையின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார்.
நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக சந்தீப் கோஷுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், கொல்கத்தாவில் உள்ள அவரது தந்தை சத்ய பிரகாஷ் கோஷின் வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சத்ய பிரகாஷ் கோஷ் வீட்டில் சில அறைகள் பூட்டப்பட்டுள்ள நிலையில், பூட்டு திறக்கும் தொழிலாளியை நேரில் அழைத்து வந்து அறைகளை திறந்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.