மகன்கள் மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்த காவல்துறை - பாடகர் மனோ மனைவி குற்றச்சாட்டு!
Feb 4, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகன்கள் மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்த காவல்துறை – பாடகர் மனோ மனைவி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 17, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாடகர் மனோ மகன்கள்  மீதான புகார் தொடர்பாக காவல்துறையினர் அவசர கதியில் வழக்கு பதிவு செய்துள்ளதாக மனோவின் மனைவி ஜமீலா தெரிவித்துள்ளார். புதிய சிசிடிவி பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்டதாக மதுரவாயலைச் சேர்ந்த கிருபாகரன் என்ற இளைஞரும், 16 வயது சிறுவனும் கடந்த வாரம் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனோவின் மகன்களான சாஹிர், ரஃபீக் ஆகியோர் தலைமறைவான நிலையில், மனோவின் மகன்கள் தங்களை மதுபோதையில் தாக்கியதாக புகார் அளித்தவர்கள் குற்றச்சாட்டினர்.

இந்நிலையில் மனோவின் மகன்களும், புகார் அளித்த எதிர்தரப்பினரும் மோதிக்கொள்ளும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சிகளில் பாடகர் மனோவின் மகன்களை ஒரு இளைஞர் விரட்டிச்சென்று தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகள் தொடர்பாக பேட்டியளித்துள்ள பாடகர் மனோவின் மனைவி ஜமீலா, தன்னிடம் ஆதாரம் இல்லாததால்தான் இதுவரை பேசவில்லை என்றும், தற்போது உண்மை என்ன என்பதை புதிய வீடியோவில் அவைரும் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தங்களிடம் விசாரிக்காமல் அவசர கதியில் வழக்குப்பதிவு செய்ததாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தால் தனது மகன்கள் எங்கு உள்ளார்கள் என்பது கூட தமக்கு தெரியவில்லை என வேதனை தெரிவித்த அவர், இந்த வீடியோவை பார்த்துவிட்டாவது மகன்கள் நேரில் வர வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து பேசிய மனோவின் மருமகள், தனது கணவர் மற்றும் அவரது அண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என தெரிவித்தார்.

தாக்குதலின் பின்னணியில் வேறு ஏதோ காரணம் உள்ளது என்றும், தனது மாமனாரின் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் நடந்ததாக தெரிகிறது எனவும் குற்றம்சாட்டினார். மேலும், வீட்டில் தனியாக இருப்பதால், தங்களின் பாதுகாப்பு கருதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், தனது கணவர் மற்றும் அவரது அண்ணன் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags: Chennaisinger manocase aganist mano sonsmano wife jameela
ShareTweetSendShare
Previous Post

மீலாது நபி பெருநாள் – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ஆத்தூர் அருகே இருதரப்பினர் மோதல் – விசாரிக்க சென்ற காவல் அதிகாரி மீது தாக்குதல்!

Related News

ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

மதுரை மாமன்றக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஒடிசாவில் நடைபெற்ற ராம்ஜெட் என்ஜின் ஏவுகணை சோதனை வெற்றி -நீண்ட தூர போர் விமானங்களை துல்லியமாகத் தாக்க முடியும்!

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – எதிர்க்கட்சிக எம்பிக்கள் 8 பேர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் – பாஜக போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies