சென்னை ஆயிரம் விளக்கு அருகே தங்கும் விடுதி வாகன நிறுத்தும் இடத்தில் உறங்கி கொண்டிருந்த முதியவர் மீது கார் மோதி உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் கடந்த 13ஆம் தேதி தங்கும் விடுதியின் பார்க்கிங் பகுதியில் படுத்து உறங்கி உள்ளார். மறுநாள் காலை பன்னீர்செல்வம் இறந்து கிடப்பதை கண்ட அவரது உறவினர்கள் இயற்கையாக இறந்து விட்டார் என நினைத்து அடக்கத்திற்கான பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது, அவரது காதின் அருகே ரத்தம் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் தங்கும் விடுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில், நள்ளிரவு வந்த கார் ஒன்று பன்னீர்செல்வத்தின் மீது ஏறி இறங்கியதால் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
இது தொடர்பாக உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.