கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக நீலகிரி மாவட்ட எல்லை வழியாக வருபவர்கள் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் நாடுகாணி, தாளூர், பாட்டவயல், சோலாடி, நம்பியார் குன்னு, பிதர்காடு உள்ளிட்ட எல்லை சோதனை சாவடிகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனைச் சாவடி வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்படும் நிலையில், பேருந்துகளிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.
மேலும், நோய் அறிகுறிகள் தென்படுகிறதா என பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனையை சுகாதாரம் மற்றும் மருத்துவக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.