திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் பகுதிகளில் இரவு பகலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
மேலும், மழையால் காரையார், மணிமுத்தாறு போன்ற அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதால் விவசாயகள் மகிழ்ச்சியடைந்தனர்.