ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் 69 புள்ளி ஆறு ஐந்து சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த மாதம் 18-ந் தேதியும், 26 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக கடந்த மாதம் 25-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 40 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
இந்த தேர்தலில் 69 புள்ளி ஆறு ஐந்து சதவீதம் வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விறு விறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.