திருச்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் அடுத்த பாலாஜி நகரில், மான் ஃபோர்ட் சிபிஎஸ்இ தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பள்ளிக்கு இமெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு உடனடியாக விடுமுறை அறிவித்தனர்.
பின்னர் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு பள்ளி முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. , திருச்சி முழுவதும் 9 பள்ளி, கல்லுரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.