நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நவராத்திரியின் இனிய தருணத்தில் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்! இந்த புனிதமான ஒன்பது நாட்களை நாம் மா துர்க்கைக்கு அர்ப்பணிக்கத் தொடங்கும் போது, அவரின் ஆசிகள் அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் வலிமையைக் கொண்டு வரட்டும்.
தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் கொண்டாடுவோம், இரக்கம் மற்றும் ஒற்றுமையின் மதிப்புகளைத் தழுவுவோம் என எல்.முருகன் கூறியுள்ளார்.