சபரிமலை சீசனையொட்டி நாளொன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோயில் நடை அடுத்த மாதம் 16-ம் தேதி திறக்கப்படுகிறது. இதனையொட்டி சபரிமலையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கூட்டம் அதிகமாகும் நாட்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதிகள் செய்து தரப்படும் எனவும் கேரள முதலமைச்சர் தெரிவித்தார்.