தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள காவலர் நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை செலுத்தினார்.
காவல்துறையில் பணியில் இருந்தபோது உயிரிழந்த காவலர்களின் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி தேசிய காவலர் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி டெல்லியில் உள்ள காவலர் நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மாநில அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அமித்ஷா, இந்தியாவை பாதுகாப்பதற்கு காவலர்கள் செய்த தியாகங்களை மதிக்கும் ஒரு சந்தர்ப்பம் இது என கூறினார். மேலும், காவலர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குவதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.