விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவிக்கும் வரை, அவரை நடிகராகத்தான் பார்ப்போம் என தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபின், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :
இன்று திமுக பெரியாரின் திராவிட கழக கொள்கைகளை நோக்கி பயணிக்கிறது. பெரியாரின் கொள்கைகளை பிடிக்காமல் அதில் இருந்து வெளியேறி அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கினார் .
திமுக மத மறுப்பு இயக்கமாக இருக்கக் கூடாது என்பதால் திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இருந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன்”என பேசினார் .ஆனால் திமுக தற்போது அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றாமல் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுகிறது என தெரிவித்தார்
நடிகர் விஜய் தொடங்கி கட்சியின் மாநாட்டிற்கு முதியவர்கள் கர்ப்பிணிகள் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு முதலில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கைகள் குறித்து கூற வேண்டும் .
வரும் மாநாட்டிலாவது அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். அதுவரை பாஜக விஜய்யை நடிகராக தான் பார்க்கிறது என அஸ்வத்தாமன் தெரிவித்தார்.