பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பனிமூட்டம் நிலவியது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், வாலிகண்டபுரம், மங்களமேடு, இறையூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை பனிமூட்டம் நிலவியது. இதனால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.