நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி மணிமுத்தாறு அருவியில் குளிக்க 7-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதேபோல் நெல்லை களக்காடு தலையணை அருவியில் சுற்றுலா பயணிகள் நீராட வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியை பார்வையிட மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.