பிரேசிலில் ஜி 20 மாநாட்டை முடித்துக் கொண்டு கயானா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் உற்சாக வரவேற்பு அளித்தார்.
ஜி – 20 அமைப்பின் உச்சி மாநாடு தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அதனை முடித்துவிட்டு கயனாவுக்கு புறப்பட்டார். கயானா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிபர் முகமது இர்பான் அலி, பிரதமர் மோடியை இன்முகத்துடன் வரவேற்றார். இப்பயணத்தின் மூலம் 56 ஆண்டுகளுக்குப் பிறகு கயானாவுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தம்முடைய இந்த பயணம் இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை ஆழப்படுத்தும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.