தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 900 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இது வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளைக் நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.