வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் மழை பெய்தது.
சென்னை எழும்பூர், வேப்பேரி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இரவில் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.