டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, பாரதிதாசன் பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இன்று நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வுக்குரிய மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.