கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கையால் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாமென மீன்வளத்துறை உதவி இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.