மதுரை அழகர்மலையில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்குக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அழகர் மலை மீது அமைந்துள்ள முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். இந்நிலையில் மலையில் உள்ள மின்கம்பத்தில் ஏறிய குரங்கு மீது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டது. இதைக் கண்ட தர்மராஜன் என்பவர் குரங்குக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பிய குரங்கு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.