மதுரையில், வருவாய்த்துறையினர் போராட்டத்தால் உயர்கல்வித்துறை அமைச்சர் மாற்றுப்பாதையில் சென்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில், அதே வளாகத்தில் அமைச்சரின் கார் அருகே வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அமைச்சர் ஆய்வு கூட்டம் முடிந்து மாற்றுப்பாதை வழியாக சென்றார். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.