உலகுக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் உதவும் நாடு இந்தியாதான் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
டெல்லியில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி முகுல் கனித்கர் எழுதிய ‘பனாயென் ஜீவன் பிரான்வான்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் சுவாமி அவதேசானந்த கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தனிமனித ஒழுக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அதன் வேர் ஆக பிராண சக்தி விளங்குவதாகவும் தெரிவித்தார். இந்தியாவுக்கும் பிராண சக்தி இருப்பதாக கூறிய மோகன் பகவத், அது நமக்கு முன்பாக இருந்தாலும், கண்களுக்கு புலனாகாது என குறிப்பிட்டார். உலகிற்கு ஒரு பிரச்னை என்றால், நட்பு நாடு, எதிரி நாடு என்ற பாகுபாடு இல்லாமல் முதலில் உதவுவது இந்தியாதான் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.